Wednesday, November 20, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்டிக்கர் இல்லாத மதுபான போத்தல்களை கண்டறிய விசேட சுற்றிவளைப்பு

ஸ்டிக்கர் இல்லாத மதுபான போத்தல்களை கண்டறிய விசேட சுற்றிவளைப்பு

பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இல்லாத மதுபான போத்தல்களை பறிமுதல் செய்யும் நோக்கில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் டின்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கடந்த வருடம் கலால் திணைக்களம் கட்டாயமாக்கியது.

மதுபான உற்பத்தியாளர்கள் மீது விதிக்கப்படும் வரிகளை எவ்வித முரண்பாடுகளும் இன்றி அரசாங்கம் வசூலிப்பதை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மதுபான போத்தல்கள் உற்பத்தி நெறிமுறைகளுக்கு இணங்கியுள்ளன என்பதை பாதுகாப்பு ஸ்டிக்கர் உறுதிப்படுத்துகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது குறிப்பிட்ட போத்தல்களில் போலி ஸ்டிக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, இந்த வாரம் முதல் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles