முகத்துவாரம் பகுதியில் பயன்பாட்டுக்கு உட்படுத்த முடியாத வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை உணவு பொருட்கள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த உணவு பொருட்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதோடு, களஞ்சியசாலையும் முத்திரையிடப்பட்டுள்ளது.
இதன்போது 35,000 கிலோகிராம் நிறையுடைய தரமற்ற சீனி, 15,000 கிலோகிராம் நிறையுடைய தரமற்ற சவ்வரிசி மற்றும் ஒரு தொகை அப்பளம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஒரு தொகை உப்பும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் களஞ்சியசாலையின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.