Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுல்லைத்தீவு வாகன விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு வாகன விபத்தில் ஒருவர் பலி

கொக்கிளாய் முல்லைத்தீவு வீதியில் உழவு இயந்திரம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

காயமடைந்தவர்களை மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உக்கல்கெல ஜா அல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தற்போது சடலம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொக்கிளாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles