Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலவில தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவர் கைது

தலவில தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐவர் கைது

தலவில தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த ஐந்து பேரை கல்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் நேற்று (01) இரவு தேவாலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் மத்தியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடியதால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 23 மற்றும் 24 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் மன்னார் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

அவர்கள் அவ்விடத்திற்கு சென்றதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் அவர்கள் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles