Saturday, February 14, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியா சிறைச்சாலை இரு வாரங்களுக்கு பூட்டு

வவுனியா சிறைச்சாலை இரு வாரங்களுக்கு பூட்டு

வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் மத்தியில் வேகமாக பரவி வரும் தொற்று நோய் காரணமாக சிறைச்சாலையை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகள் தமது உறவினர்களை சந்திப்பதற்கு வாய்ப்பில்லை எனவும், கைதிகளின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கைதிகளுக்கு தட்டம்மை போன்ற தொற்று நோய் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய நிலைமை காரணமாக சிறைக் கைதிகளின் நடவடிக்கைகளுக்காக ஏனைய நாட்களை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறைச்சாலையில் குறைந்த இடவசதி இருப்பதால் நோய்கள் பரவுவது மிக வேகமாக நடப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வந்து கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நோய்த்தடுப்பு ஊசி மருந்துகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles