மஸ்கெலியாவில் சிறுமி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
2 கிலோமீட்டர் தூரத்தை 14 நிமிடங்களில் நடந்து நேற்று (31) இந்த சாதனையை படைத்துள்ளார்.
விக்னேஸ்வரன் ஷஸ்மிகா என்ற இந்த சிறுமி மஸ்கெலியா சென் ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
மஸ்கெலியா ஸ்ரீ பாத வீதியில் இருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலையம் வரை 14 நிமிடங்களில் 2 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரம் நடந்து இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் தனது தந்தை எஸ்.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு முதன்முதலாக நடந்து சென்று சாதனை படைத்ததாகவும் அதனால் தானும் கின்னஸ் சாதனை படைக்க விரும்புவதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.