இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒரு வருடத்தில் சுமார் 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 15 மில்லியன் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாகவும், தேவையான இயந்திரங்களுக்காக ஒரு மில்லியன் டொலர்கள் மட்டுமே செலவிடப்பட வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள கடவுச்சீட்டு வழங்கும் முறையை தொடரவும், எதிர்காலத்தில் மீண்டும் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறையை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.