Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெபிதிகொல்லாவ பகுதியில் ஒருவர் படுகொலை

கெபிதிகொல்லாவ பகுதியில் ஒருவர் படுகொலை

கெபிதிகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலவெவ பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் கெபிதிகொல்லாவ – கட்டுவலகாவேவெ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீட்டுக்கு அருகில் உள்ள நெல் ஆலை ஒன்றில் தங்கியிருந்ததாகவும், அப்போது அவ்விடத்திற்கு சென்ற இருவர் மண்வெட்டியால் அவரை தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களுடையது என சந்தேகிக்கப்படும் இரண்டு கைத்தொலைபேசிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட நபரின் பிரேத பரிசோதனை இன்று (29) அனுராதபுரம் வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles