Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்டட நிர்மாணத்துறையில் 12 இலட்சம் பேர் வேலையிழப்பு

கட்டட நிர்மாணத்துறையில் 12 இலட்சம் பேர் வேலையிழப்பு

பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டட நிர்மாணத்துறையில் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியுள்ளதாக பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

இத்துறையுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ள பெருமளவானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும், இக்குழுவினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் அவர் தெரிவித்தார்.

வீதி நிர்மாணம் மற்றும் வீடு நிர்மாணப் பணிகளில் ஈடுபடும் மக்களுக்கு மேலதிகமாக அவற்றுக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கும் மக்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles