Monday, September 15, 2025
31 C
Colombo
செய்திகள்உலகம்20 ஆண்டுகளின் பின்னர் பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர்

20 ஆண்டுகளின் பின்னர் பெண்ணுக்கு மரண தண்டனை வழங்கிய சிங்கப்பூர்

20 ஆண்டுகளின் பின்னர் சிங்கப்பூர் அரசாங்கம் பெண் ஒருவருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

31 கிராம் ஹெரோயின் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

45 வயதுடைய குறித்த பெண் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதனை தொடர்ந்து இன்றைய தினம் தூக்கிலிடப்பட்டார்.

போதை பொருள் வர்த்தகம் மற்றும் பாவனைக்கு எதிராக சிங்கப்பூர் அரசாங்கம் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய 500 கிராம் கஞ்சா மற்றும் 15 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைபொருளை தம்வசம் வைத்திருந்தால் அல்லது வர்த்தகத்தில் ஈடுபட்டால் மரணதண்டனை விதிக்கப்படும் என்பது அந்நாட்டின் சட்டமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles