Sunday, November 2, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவடக்கு - கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு – கிழக்கில் இன்று ஹர்த்தால்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்திற்கு நீதிக்கோரியும், சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பு அவசியம் என வலியுறுத்தியும் இந்த நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம், முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முல்லைத்தீவு மாவட்டத்தின் வர்த்தக சங்கங்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles