Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலுணுகலையில் பேருந்து விபத்து

லுணுகலையில் பேருந்து விபத்து

பதுளை – லுணுகலை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

லுணுகலை – அடாவத்தை 13ஆவது கொலணி பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குறித்த பேருந்தில் 6 மாணவர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களுள் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles