வனப் பகுதிகளிலும், சாலையோரங்களிலும் சுற்றித் திரியும் யானைகளுக்கு உணவளிக்க வேண்டாம் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு உணவு வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
காட்டு யானைகளுக்கு உணவு கொடுப்பதனால் இவ்வாறான விலங்குகள் வீதிக்கு வருவது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.