கொழும்பு தாமரை கோபுரத்தை இதுவரை ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.
கொழும்பு தாமரை கோபுரத்தைப் பார்வையிட்ட ஒரு மில்லியன் மக்களில் சுமார் 22,000 வெளிநாட்டவர் உள்ளனர்.
கோபுரத்தைப் பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வழங்கப்படும் என்றும் பார்வையாளர்கள் இரவு 10 மணி வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
வார இறுதி நாட்களில், பொதுமக்கள் இரவு 11 மணி வரை தாமரை கோபுரத்தில் இருக்க முடியும் என நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
தாமரை கோபுரத்தை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.