விடுமுறைக்காக இலங்கை விமான வழித்தடத்தின் மூலமாக மாலைத்தீவு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.
அதன்படி, அவர் ஸ்ரீலங்கன் விமான சேவையின் “BIA Gold Route” முறை மூலமாக இந்தியா திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
‘கோல்ட் ரூட்’ சேவையானது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதி விசேட பிரமுகர்களுக்காக வழங்கப்படும் பயண சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.