339 மில்லியன் ரூபா மின் கட்டண நிலுவையை செலுத்தாமைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
ஐந்து மாதங்களாக நிலுவைத் தொகை செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மின்சார சபை அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிலையங்களில் அதிகளவான நோயாளர்கள் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாகவும், தேசிய வைத்தியசாலையில்மின்வெட்டு ஏற்பட்டால் நோயாளர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாக நேரிடும் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.