பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் இரண்டு நாள் (28,29) விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பும் போது அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.
தனது குறுகிய கால பயணத்தின் போது இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.