Monday, February 23, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60 வயது பெண்ணை வன்புணர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

60 வயது பெண்ணை வன்புணர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ரம்புக்கன – இஹலகம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் இரவு நேரத்தில் நுழைந்து அங்கிருந்த 60 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரம்புக்கனை பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 60 வயதுடைய பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் இந்த சார்ஜன்ட் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் கேகாலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles