Tuesday, September 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியுடன் தொடர்பு: இளைஞன் கைது

சிறுமியுடன் தொடர்பு: இளைஞன் கைது

15 வயது சிறுமியுடன் உறவுகொண்ட 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், குறித்த சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமூக வலைதளம் மூலம் அடையாளம் காணப்பட்ட மஹவ பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதல் கொண்டதாகவும், குறித்த இளைஞன் தன்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தின் பிரகாரம், மஹவ பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கல்கமுவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெட்டுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles