Monday, November 18, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை

90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை

நாட்டிலுள்ள 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என இலங்கை உயிர்காக்கும் சங்கம் (SLLSA) தெரிவித்துள்ளது.

பெரும்பாலான மீனவர்களுக்கு தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக SLLSA பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்தார்,

அனர்த்த முகாமைத்துவ மையம் மூலம் நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீனவர்களுக்கு இருக்கும் நீச்சல் திறன் கடலில் உயிரைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை.

ஒரு நீச்சல் வீரர் 10 நிமிடங்களில் அமைதியான நீரில் குறைந்தது 200 மீட்டர் தொடர்ந்து நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.

சர்வதேச அளவுகோல்களின்படி, உயிரைக் காப்பாற்றுபவர் ஒருவரைக் காப்பாற்ற ஆறு நிமிடங்களில் 200 மீட்டர் நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.

கடல் போன்ற வேகமான நீரில், ஒரு நீச்சல் வீரர் 400 மீட்டர்களை ஒன்பது நிமிடங்களில் நீந்த வேண்டும்.

மேலும் ஒரு உயிர்காப்பவர் அமைதியான நீரில் நீந்த குறைந்தபட்சம் ஆறு நிமிடங்கள் எடுக்க வேண்டும் என்பது உடற்பயிற்சி தரநிலை.

இலங்கையில் தினமும் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

மீனவர்கள் தங்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகளை (தனிப்பட்ட மிதக்கும் சாதனங்கள் அல்லது PFDகள்) அணிவதில்லை என்றும் நாணயக்கார குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles