Monday, August 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய தந்தை

3 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய தந்தை

தலவாக்கலை – லிந்துலை பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மூன்று வயது குழந்தையின் உடலில் வெந்நீரை ஊற்றிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (24) மாலை குடிபோதையில் இருந்த தந்தை, குழந்தையை கொடூரமாக தாக்கி,உடலில் வெந்நீரை ஊற்றியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குழந்தையின் தந்தை நுவரெலியா பிரதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குழந்தையின் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் அதிகம் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட சிகிச்சையின் பின்னர் விசேட வைத்திய நிபுனர் ஒருவரின் கீழ் மேலதிய சிகிச்சைக்காக நுவரேலியா தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படும் எனவும் லிந்துலை பிராந்திய வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி ஏ. ஜெயராஜன் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles