நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்ல – சீதுவ பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார்.
சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
காணாமல் போன சிறுமியின் தந்தை நீர்கொழும்பு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காயத்ரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற பாடசாலை மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சிறுமியைப் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை னன்பதுடன், அவரை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலும் அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
பொலிஸ் பரிசோதகர் நீர்கொழும்பு தலைமையகம் – 0718 591 630
நீர்கொழும்பு பொலிஸ் – 0312 222 227