நடிகர், நடிகைகளுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பணம் செலவழித்துள்ளது நிரூபிக்கப்பட்டால், தாம் பதவி விலகுவதாக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (25) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
போட்டியில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் மற்றும் நண்பர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சைப கடிதம் வழங்கியதாகவும், அவர்களுக்காக எந்த பணத்தையும் செலவிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியை ஊக்குவிக்கும் வகையில் போட்டியை காண சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை அணியை ஊக்குவிக்க அந்த நடிகர் நடிகைகளும் வருவார்கள் என தலைவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணத்தை காண நடிகர், நடிகைகள் மற்றும் நண்பர்களுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பணம் செலவழித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் பரவி வருகின்றன.