Sunday, August 10, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் மொஸரெல்லா சீஸ் - ஒலிவ் உற்பத்தி செய்ய நடவடிக்கை

இலங்கையில் மொஸரெல்லா சீஸ் – ஒலிவ் உற்பத்தி செய்ய நடவடிக்கை

இலங்கையில் மொஸரெல்லா சீஸ் உற்பத்தி மற்றும் ஒலிவ் பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, இத்தாலி விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரோமில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19வது அமர்வில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, இத்தாலி விவசாய அமைச்சரை சந்தித்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தென் மாகாணத்தில் எருமை மாடுகளை மிகச் சிறந்த முறையில் நிர்வகிப்பதன் காரணமாக மொஸரெல்லா சீஸ் உற்பத்தி இலகுவாக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles