இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
NDCU புள்ளிவிவரங்களின்படி, 2023 25 ஜூலை வரை மொத்தம் 55,049 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதே நேரத்தில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 36 ஆக உள்ளது.
இதேவேளை, இலங்கை முழுவதிலும் 52 பகுதிகள் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதிகளவான நோயாளிகள் கமபஹாவில் பதிவாகியுள்ளதுடனர், அங்கு இதுவரை 11,929 பேர் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.