கடந்த இரண்டு வருடங்களாக எதிர்நோக்கி வரும் கடுமையான டொலர் நெருக்கடி காரணமாக அந்நிய செலாவணி மீதான பல கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, புலம்பெயர்ந்தோர் கொடுப்பனவை முதன்முறையாக கோரும் அதிகபட்ச வரம்பு 30,000 அமெரிக்க டொலரிலிருந்து 50,000 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோர், குடியிருப்பாளர்கள் மற்றும் பங்குச் சந்தையைப் பாதிக்கும் பல கட்டுப்பாடுகள் இங்கு தளர்த்தப்பட்டுள்ளன.