கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்திற்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு 1.75 பில்லியனாக பதிவாகியுள்ளது.
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 211 மில்லியனாக பதிவாகியுள்ளது.
அத்துடன் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 683 மில்லியனாக பதிவாகியுள்ளது. எஞ்சியுள்ள இரு காலாணடுகளிலும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
ஆகையினால் வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மொத்த பெறுமதி அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.