விசேட அதிரடிப் படையினரால் இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மினுவங்கொடை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹோமாகமையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபரொருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.