பயணச்சீட்டு வழங்காமல் பணம் பெற்றதற்காக நாளாந்தம் சுமார் 35 பேருந்து நடத்துனர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 532 பேருந்து சாரதிகள் மற்றும் 201 நடத்துனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.