Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணியாற்றும் தாய்மார்களுக்கு தமது பிள்ளைகளுக்கு பால் கொடுக்க 2 மணிநேர கால அவகாசம்

பணியாற்றும் தாய்மார்களுக்கு தமது பிள்ளைகளுக்கு பால் கொடுக்க 2 மணிநேர கால அவகாசம்

அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் குழந்தை பெற்ற தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு இரண்டு மணி நேர கால அவகாசம் வழங்க தொழிலாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2018ல் செய்யப்பட்ட திருத்தத்தின் விளைவாக இரண்டு மணி நேர கால அவகாசம் கிடைப்பது பலருக்கு தெரியாது என மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் தொழிலாளர் ஆணையர் என்.எம்.வை.துஷாரி தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட தாய் சேவையாற்றும் காலப்பகுதியில் ஏதேனும் இரண்டு மணிநேரம் அவரின் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க அனுமதிக்க நிறுவனத் தலைவர் கடமைப்பட்டிருக்கிறார்.

இதன்மூலம், இரண்டு மணி நேரத்தை சேவை ஆரம்பிப்பதற்கு முன்னர் அல்லது சேவையை நிறைவு செய்ய இரு மணித்தியாலங்களுக்கு முன்னர் பெற முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles