Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநோய் எதிர்ப்பு மருந்து ஒவ்வாமை – மற்றுமொருவர் உயிரிழப்பு

நோய் எதிர்ப்பு மருந்து ஒவ்வாமை – மற்றுமொருவர் உயிரிழப்பு

நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டமையால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக கேகாலை போதனா வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த 10 ஆம் திகதி கேகாலை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்ச்சைக்குரிய மருந்தான செஃப்டர் எக்ஸோன் மருந்தும் குறித்த நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles