நியூசிலாந்தின் ஒக்லண்ட் நகர மையத்தில் உள்ள கட்டுமான தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.