Tuesday, July 29, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாயும், 11 மாத சிசுவும் மாயம்

தாயும், 11 மாத சிசுவும் மாயம்

அங்குருவத்தோட்ட ஊராடுதாவ பிரதேசத்தில் இளம் தாயும் அவரது 11 மாத கைக்குழந்தையும் காணாமல் போயுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது கணவர் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியேறி, அன்று மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பியபோது, ​​மனைவி மற்றும் மகள் இல்லாததால் பதற்றமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

இங்கிரிய பிரதேசத்தில் உள்ள மனைவியின் பெற்றோருடன் தொடர்பு கொண்டும் அவர்கள் வரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி விசாரணை நடத்திய பொலிஸார், காணாமல் போன பெண்ணின் நெருங்கிய உறவினரின் முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தி அவரை விசாரணைக்காக பொலிஸ் காவலில் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles