நாட்டில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், நாட்டிலிருந்து அகற்றப்பட்ட மூன்று தொற்று நோய்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு அறிவித்தபடி நாட்டில் இருந்து அகற்றப்பட்ட 6 தொற்று நோய்களில் மலேரியா, யானைக்கால் நோய் மற்றும் தட்டம்மை ஆகியவை மீண்டும் வந்துள்ளன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையின் நெருக்கடி எதிர்வரும் நாட்களில் மேலும் மோசமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.