ஓபநாயக்க, உடவெல பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டியொன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
குறித்த விபத்தானது இன்று காலை 6.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓபநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.