ஒரு இலட்சம் பேர் வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் நலமுடன் வீடு திரும்ப மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன் காரணமாகவே ஒவ்வொரு வைத்தியசாலைக்கு முன்பாகவும் மலர்சாலைகள் இருப்பதாகவும், அதுவே யதார்த்தம் எனவும், சுகாதார அமைச்சர் பதவியை எவரேனும் பெற விரும்பினால் அது வேறு கதை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி 2003 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அந்த தடுப்பூசி போடப்பட்ட 12 சிறுவர்கள் அதே சிகிச்சை பிரிவில் இருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.