Monday, July 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய களனி பாலத்தின் நட்டுகள், போல்ட்கள் திருடப்படவில்லையாம்

புதிய களனி பாலத்தின் நட்டுகள், போல்ட்கள் திருடப்படவில்லையாம்

புதிய களனி பாலத்தில் இருந்து மில்லியன் கணக்கான ரூபா பெறுமதியான நட்டுகள் மற்றும் போல்ட்கள் அகற்றப்பட்டு திருடப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மறுத்துள்ளார்.

விசேட கருவிகள் பயன்படுத்தாமல் அவற்றை அவ்வளவு இலகுவாக அகற்ற முடியாது என அவர் தெரிவித்தார்.

பாலத்தில் இருந்து நட்டுகள் மற்றும் போல்ட்கள் அகற்றப்படவில்லை எனவும் அவற்றை அகற்றுவதற்கு தேவையான விசேட கருவிகள் சம்பந்தப்பட்ட பொறியியல் நிறுவனங்களிடம் மாத்திரமே இருப்பதாகவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்கு பதிலளித்த அவர், வடிகால் அமைப்பின் சில GI குழாய்கள் PVC குழாய்கள், பாலத்துடன் இணைக்கப்பட்ட தொடர்பாடல் அறையின் குளிரூட்டும் அமைப்பின் சில பகுதிகள் மற்றும் பாலத்தில் பொருத்தப்பட்ட வண்ண பல்புகள் மட்டுமே திருடப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles