தேசிய மரபுரிமைச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சம்புத்த ஜயந்தி திரிபீடக நூல் தொடர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டு அச்சிடப்படும் என புத்தசாசன, சமய கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பௌத்த மதத்தை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் உள்ளுர் மற்றும் சர்வதேச அளவில் திரிபீடகத்தை கற்க ஆர்வமுள்ள அனைத்து மதகுருமார்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மகாநாயக்கர்களின் ஆலோசனை மற்றும் அனுமதியைப் பெற்று இப்பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தப் பணியை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, உச்ச சபை, மேற்பார்வைச் சபை மற்றும் நிறைவேற்று சபை ஆகிய மூன்று சபைகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், அமைச்சரவையின் அனுமதியையும் பெற வேண்டும் எனவும் அமைச்சர் விக்கிரமநாயக்க மேலும் தெரிவித்தார்.