ஜெரொம் பெர்னாண்டோவுடன் தொடர்புடைய 9 வங்கிக் கணக்குகளை பரிசீலிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்துக்கு நேற்று (18) அனுமதி வழங்கியுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.