கண்டி, பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி ஒருவர் கம்பஹா இஹலகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அவதானித்த கம்பஹா குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் போது சந்தேகநபர் பல்லேகல சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் நாட்டில் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் உள்ளவர் என்றும், சிறையிலிருந்து தப்பிச் சென்ற அவர் கம்பஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்திருப்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் சந்தேக நபர் கம்பஹா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.