Monday, March 23, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசக்விதியும் அவரது மனைவியும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

சக்விதியும் அவரது மனைவியும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்

நிதி நிறுவனமொன்றை நடத்தி பண மோசடி குற்றச்சாட்டை சக்விதி ரணசிங்கவும் அவரது மனைவியும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (19) ஒப்புக்கொண்டனர்.

சட்ட மா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (19) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெட்டபந்தி முன்னிலையில் வாசிக்கப்பட்டது.

இதன்படி, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக் கொள்வதாக பிரதிவாதிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதன் பின்னர்இ பிரதிவாதிகள் தலா 50 இலட்சம் ரூபா வீதம் மாதாந்த தவணைகளில் உரிய தொகையை செலுத்துவதற்கு நீதிமன்றில் ஒப்புக்கொண்டனர்.

இதன்படி, முதல் தொகை இன்று செலுத்தப்படும் என பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles