மஹியங்கனை – தெய்கொல்ல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றை காட்டு யானை இன்று (19) அதிகாலை தாக்கியுள்ளது.
இதனால் வீடு முற்றாக சேதமடைந்ததுடன், வீட்டிலிருந்த இரு பெண்களும் யானையின் தாக்குதலுக்குள்ளாகி, படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 68 வயதுடைய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.23 வயதுடைய யுவதி தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்தவரின் சடலம் மஹியங்கனை வைத்தியசலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.