ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குழுநிலையின் போது, நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சியினரால் பல திருத்தங்கள் செய்யப்பட்டன.
சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பின் பின்னர், ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.