Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

செங்கல் சூளையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் இங்கிரிய பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டு, இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று (17) மாலை 6 மணியளவில் சுகவீனமுற்றுள்ளார்.

வயிற்று வலி காரணமாக சந்தேகநபர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இசுருபுர – இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles