நாடு பொருளாதார வங்குரோத்து நிலையை அடைந்தமைக்கான காரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று முதன்முறையாக கூடவுள்ளது.
தெரிவுக்குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.