மொரட்டுவை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை எகொட உயன பகுதியில் பெலவத்தை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று டயரை மாற்றுவதற்காக வீதியோரத்தில் தரித்திருந்த பேருந்துடன் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் கெப் வண்டியில் பயணித்த ஐவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.