அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஃபால்புரூக் நகரில் நேற்று (17) சிறுமியொருவர் (1) தனது சகோதரனால் (3) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சிறுவன் பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியை எடுத்தபோது தவறுதலாக வெடித்ததில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.