எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுதந்திர ஜனதா சபையின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிக்க பேரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படிஇ சுதந்திர ஜனதா சபை தமக்கு ஆதரவளிக்கும் எவருடனும் கூட்டணி அமைக்கத் தயார் எனவும் எதிர்க்கட்சிகளுடன் எதிர்காலத்தில் கலந்துரையாடத் தயார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை வகிக்க மிகவும் பொருத்தமான ஒரு ஊழலற்ற நபராக டலஸ் அழகப்பெருமவை நியமிக்க எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.