Monday, September 15, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2027க்கு பின்னர் IMF இன் உதவி தேவையில்லை - ஷெஹான் சேமசிங்க

2027க்கு பின்னர் IMF இன் உதவி தேவையில்லை – ஷெஹான் சேமசிங்க

2027ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உள்ளூர் கடன்களை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நாடாக இலங்கை சர்வதேச சமூகத்திற்கு முன்னுதாரணமாக மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு தற்போது 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த மாதத்திற்குள் பணவீக்கம் 7% முதல் 8% வரை குறையும் என அமைச்சர் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles