மர்மமான முறையில் உயிரிழந்த 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வயிற்று வலி காரணமாக அண்மையில் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த குறித்த யுவதி,வைத்தியசாலையினால் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக ஐவரடங்கிய விசேட வைத்தியர்கள் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.